பகிர்தல்

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.

நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்

- ஆப்ரகாம் லிங்கன்

பொன்மொழி

பேசும்முன் கேளுங்கள், எழுதுமுன் யோசியுங்கள், செலவழிக்கும்முன்
சம்பாதியுங்கள்

சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக் கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்

நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்

நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்

நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்றுவிடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது

நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை

உண்மையான அன்பு

விரும்பும் போதெல்லாம் விரும்புகிறேன் என்பதை விட‌
வெறுத்த போதும் விரும்பினேன் என்பதே உண்மையான அன்பு

விவேகானந்தர் மொழி - 2

அவமானங்கள் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்;
நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால்

- சுவாமி விவேகான‌ந்த‌ர்

விவேகானந்தர் மொழி

நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ
அது தான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்

- சுவாமி விவேகானந்தர்

என்ன சமையலோ ?

கணவன் : இன்னிக்கி என்ன சமையல்
மனைவி : (கடுப்பாக) ம்ம்ம், விஷம்
கணவன் : சரி சரி, எனக்காக காத்திராமல் நீ சாப்பிட்டுடு தூங்கு

'காதல்'

ரோஜா கூட்டத்தில் இருந்துக்கொண்டு ஒரு ரோஜாவை மட்டும் ரசிக்கும் செயல் தான்
'காதல்'
ஆக, சைட் அடிப்போம், சந்தோசமா இருப்போம்