பேசும்முன் கேளுங்கள், எழுதுமுன் யோசியுங்கள், செலவழிக்கும்முன்
சம்பாதியுங்கள்
சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக் கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்
நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்
நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்
நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்றுவிடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது
நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை
7 comments:
பொன்மொழிகள் எல்லாம் அருமை..;))
ஆமா இதெல்லாம் கவிஞர் பிரேம்குமாரோட பொன்மொழிகளா!!!??
;))
இப்ப முடிவா என்ன சொல்ல போறிங்க????
???? :)))))))))
//ஆமா இதெல்லாம் கவிஞர் பிரேம்குமாரோட பொன்மொழிகளா!!!??//
சத்தியமா இல்லை மாப்பி, எல்லாமே குறுஞ்செய்தியாக வந்தவை தான்
நல்ல கருத்துகளை வரவேற்க்கிறேன்
நல்ல கருத்துள்ள பொன் மொழிகள்
குறுஞ்செய்தியாய் வந்த நல்மொழிகளைப் பகிர்ந்து கொள்ளும் பாங்கு பாராட்டுக்குரியது. நன்றி. அத்தனையும் அருமை.
வேளராசி, ராகினி,ராமலட்சுமி,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment